சவுடேஸ்வரி அம்மன் கோவில் தொட்டு அப்ப நிகழ்ச்சி வரும் டிச.,6ம் தேதி கொடியேற்று விழா

schedule
2018-11-26 | 11:14h
update
2026-04-14 | 09:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Then thottu appa the event in Sowdeswari Amman will Dec., 6th Flag Hosting Festival

நாமக்கல், சவுடேஸ்வரி அம்மன் கோவில் தை அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு தொட்டு அப்ப நிகழ்ச்சி வரும் டிசம்பர் 6ம் தேதி கொடியேற்று விழா நடைபெறுகிறது.

Advertisement

நாமக்கல்- துறையூர் ரோடு என். புதுக்கோட்டை அருகில் ஒஸக்கோட்டை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு தொட்டு அப்ப திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு தொட்டு அப்ப நிகழ்ச்சி வரும் டிசம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 12-15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு சேலம் சரக என்போர்ஸ்மென்ட் போலீஸ் எஸ்பி ஸ்டாலின் தலைமை வகித்து கொடியேற்றிவைக்கிறார்.

சேலம் சவுடேஸ்வரி கல்லூரி நிர்வாக அறங்காவலர் குமாரராஜா முன்னிலை வகிக்கிறார். விழாவில் சண்முகபிரியா ஸ்டாலின், சாவித்திரி ஆகியோர் குத்து விளக்கேற்றுகின்றனர். மதியம் 1 மணிக்கு ஸ்ரீசக்தி அழைப்பு நிகழ்ச்சியும், மதியம் 1.30 மணிக்கு மகாதீபாராதனை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருவிழாக்குழுவினர், அன்னதான அறக்கட்டளை குழு மற்றும் பவுர்ணமி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 09:53:26
Privacy-Data & cookie usage: