பெரம்பலூரில் தூங்கி கொண்டிருந்த பெண் அதிகாரியிடம் 7 பவுன் தங்க செயினை பறித்த கொள்ளையர்கள்! பக்கத்து வீட்டிலும் 20 ஆயிரம் எடுத்து சென்றனர்!

schedule
2022-08-28 | 08:04h
update
2022-08-28 | 08:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Thieves snatched 7 pounds of gold chain from a female officer who was sleeping in Perambalur! They took 20,000 from the house next door!

பெரம்பலூர் அருகே 2 வீடுகளில் 7 பவுன் நகை ரூ 20 ஆயிரம் திருட்டு நடந்தது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் 9-வார்டு வாசுகி தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பிள்ளை மகன் வினோத் (35).அரசு பாலிடெக்னிக் ஆசிரியர், இவரது மனைவி அனிதா ரூபி மின்வாரியத்தில் பொறியாளராக உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுக்கிரன் மகன் சந்துரு (50) ஆவின் ஊழியர். இந்த நிலையில் நேற்றிரவு வினோத் மற்றும் சந்துரு ஆகியோர் தங்களது வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு குடும்பத்துடன் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

Advertisement

நள்ளிரவில் பூட்டை திறந்து வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல் அனிதா ரூபி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை, பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். திடுக்கிட்டு எழுந்த அனிதா ரூபி தனது தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு ஓடுவதை பார்த்து, கூச்சலிட்டார்.

அப்போது எழுந்த அவரது கணவர் வினோத் திருடனை விரட்டினார் டூவீலரில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள், அப்பகுதியிலேயே 2 டூவீலர்களை போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்திற்கு முன்பாக சந்துரு வீட்டில் நுழைந்த திருடர்கள் அவர்கள் வீட்டில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், திருட்டு நடந்த வீடுகளில் ஆய்வு செய்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 07:46:19
Privacy-Data & cookie usage: