Thieves stole gold chain from woman near Perambalur and disappeared on bike at lightning speed!

கற்பனை காட்சி

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம், சிவன் கோயில் அருகே வசிக்கும் ராமசாமி மனைவி ராமாயி ( 69 ). இவர் இன்று காலை சுமார் 9.15 மணி அளவில் வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்து கொண்டு எழுதிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாலிபர்கள் அதிவேக பைக்கில் வந்து மூதாட்டி அணிந்திருந்த சுமார் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் மறைந்தனர். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, திரண்ட அக்கம் பக்கத்தினர், பைக்கில் விரட்டி சென்று பிடிக்க முயன்றனர், ஆனால், கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடடினயாக அனைத்து காவல் மற்றும் ரோந்து போலீசாருக்கும், கொள்ளையர்கள் பைக்கில் தப்பி வருவதை தெரிவித்தனர். போலீசார் உஷார் ஆனதை அறிந்த கொள்ளையர்கள் பைக்கை நிறுத்தமால் தப்பி சென்றனர்.

போலீசாரின் சிசிடிவி கேமரா காட்சிகள், எசனை கிராமத்தில் உள்ள சிசிடிவிக்களில பதிவான கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்ட போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அவர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நடந்த இச்சம்பவம் அப்பகுதிகளை பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!