Third stage admission in 25% reservation : CEO

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மூன்றாம் கட்டமாக 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் ஆணைக்கிணங்க மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு காலியாக உள்ள இடங்களுக்கு நிரப்பிட மூன்றாம் கட்டமாக இணையதளவழியில் பதிவு செய்துகொள்ள 11.09.2017 முதல் 25.09.2017 முடிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளிவாhpயாக காலியாக உள்ள இடங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

26.09.2017 அன்று முதல் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவற்றைத் தேர்வு செய்யப்பட வேண்டும். 27.09.2017 அன்று பள்ளிவாரியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலரால் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

28.09.2017 அன்று சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்குத் துறைசார்ந்த பிரதிநிதியை நேரில் அனுப்பித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் தகுதியான குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்கவும், தேவை ஏற்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட சேர்க்கையின்போது முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் , வட்டார வளமையம், அரசு இ – சேவை மையங்களிலிருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது போன்றே இம்முறையும் இணையதளம் வழியில் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!