பூலாம்பாடி அருள்மிகு திரவுபதி அம்மன் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை!

schedule
2022-08-05 | 16:43h
update
2022-08-05 | 16:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Thiruvilakku Pooja today in the temple of the Goddess Draupadi Amman of Poolampadi!

பூலாம்பாடி அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைவ வட்டம், பூலாம்பாடி பேரூரில், அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜுலை 6 ந்தேதி வெகுவிமரிசையாக நடந்தது. அதனை தொடர்ந்து கோவிலில் தினமும் மண்டல பூஜை உபயதாரர்கள் சார்பில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்குகளை கொண்ட விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

இதில், ரந்தினி டத்தோ. எஸ். பிரகதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 108 பெண்கள் குத்து விளக்கு உடன் பூஜையில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனைகள் காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது…

இந்த திருவிளக்கு பூஜையில் பூலாம்பாடி மற்றும் சுற்று வட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:18:03
Privacy-Data & cookie usage: