தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஈரோட்டில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

schedule
2018-05-24 | 09:19h
update
2018-12-22 | 08:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tuticorin fire incident: Nam Tamil’s arrested for trying to siege the Collectorate in Erode

தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம்தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோரை போலீார்கைது செய்தனர்..

Advertisement

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். காவல்துறையின் இந்த செயலுக்கு தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் காவல்துறையினரை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிடும் போரட்டம் நடத்தினர்.முன்னதாக ஆசிரியர் காலனி குடியிருப்பில் இருந்து பேரணியாக சென்ற நாம்தமிழர் கட்சியினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்ததால் பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்..

Tags: Erode
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 15:31:28
Privacy-Data & cookie usage: