பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழப்பு

schedule
2016-03-19 | 15:48h
update
2026-06-22 | 10:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமம் திடீர் குப்பத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜீவ்(70), இவர் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடித்து விட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச்சேர்ந்த பெரியசாமி மகன் ராமகிருஷ்ணன்(48), என்பவர் ஓட்டி வந்த டூவீலர் முதியவர் ராஜீவ் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ராஜீவ் அப்பகுதியிலிருந்தவர்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்சில் பெரம்பலூர் கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டூவீலர் மீது லாரி மோதி விபத்து விவசாயி பலி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டாபுரம் கிராமம் கடைவீதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ராமசாமி(55), விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வாலிகண்டாபுரம் கிராமத்திலுள்ள ஊருக்கு கிழக்கு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு டூவீலரில் வீடு நோக்கி வந்தவர்

Advertisement

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு வருவதற்காக கடக்க முயன்றுள்ளார்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியிலிருந்து முருங்கை காய்லோடு ஏற்றி கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கொட் நோக்கி வந்த லாரி விவசாயி ராமசாமி ஓட்டிச்சென்ற டூவீலர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிச்சென்ற லாரி டிரைவர் நல்லேந்திரன்(46) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு விபத்து:

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையை கடக்க முயன்ற வட மாநில வாலிபர் உயிரிழப்பு

ஒரிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், பரோடிகிராமத்தை சேர்ந்தவர் ரகுதாஸ் மகன் நாராயணதாஸ்(32),கட்டட தொழிலாளியான இவர் நேற்று முன்னதினம் காலை பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரம் கிராமத்திலுள்ள எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் கட்டட பணி மேற்கொண்டு வரும் யுஆர்சி என்ற நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயகோபாலபுரத்தில் சாலையில் மேற்கு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மேற்கு பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு வருவதற்காக கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் நாராயணதாஸ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாராயணதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 10:06:44
Privacy-Data & cookie usage: