பெரம்பலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

schedule
2017-09-06 | 07:07h
update
2026-07-03 | 14:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Three persons belonging to one family were poisoned at Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் கல்லுடைக்கும் தொழிலாளியான இவர் தற்போது பாடாலூர் அருகே உள்ள இரூர் கிராமத்தில் குடும்பத்துடன் வேலை செய்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் ரத்தினம், தனம் தம்பதியினரின் மகள் சுமதி(18),பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டதால் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மூவரும் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கினார்.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு பாடாலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து ரத்தினம், தனம், சுமதி ஆகிய மூவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரின் தற்கொலை முயற்சிக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 14:38:09
Privacy-Data & cookie usage: