பெரம்பலூர் அருகே மூன்று கடைகளில் பூட்டை உடைத்து கம்பியூட்டர், ரொக்கம் பொருட்கள் திருட்டு

schedule
2018-10-31 | 16:21h
update
2018-10-31 | 16:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Three shops in Perambalur broke the lock and theft of cash and Laptop Computer

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு துறைமங்களம் பங்களா பஸ்டாப் பகுதியில் தட்ஷணாமூர்த்தி என்பவர் சண்முகா என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.

Advertisement

இவர் நேற்று இரவு வழக்கம் மெடிக்கலை பூட்டி விட்டு இன்று காலை வந்துபார்த்த போது மெடிக்கல் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த 55 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்ததுள்ளது.

இதேபோல் விஜய் என்பவர் நடத்தி வரும் ஹரிஹரன் டெக்கனாலஜி கம்யூட்டர் சென்டரில் 40 ஆயிரம் மதிப்புள்ள ஒரு லேப்டாப்பும், 5 ஆயிரம் ரூபாய் பணமும், வேலுச்சாமி என்பவர் லீசுக்கு நடத்தி வரும் மெடிக்கலில் 45 ஆயிரம் பணமும் சில மருந்து மாத்திரைகளும் திருடு போனது தெரிய வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை வழக்கு பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை பார்வையிட்டதில் அடையாளம் தெரியாத நபர் மங்கி கேப் அணிந்து திருடியது தெரிய வந்துள்ளது.

நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 06:45:27
Privacy-Data & cookie usage: