விசிக, திருமாவளவன் பதாகை படத்தின் மீது சாணி வீசி அவமரியாதை : வேப்பந்தட்டையில் சாலைமறியல்!

schedule
2017-04-16 | 14:33h
update
2026-06-27 | 17:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

throwing cow dung on dishonour the image banner VCK Leader Thirumavalvan veppanthattai the roadblock!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிலையம் அருகே அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விளம்பர பதாகை வைத்திருந்தனர். அந்த விளம்பர பதாகையில் உள்ள திருமாவளவன் படத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு சாணி வீசி அவமரியாதை செய்துள்ளனர்.

இன்று காலை விளம்பர பதாகையில் அவமரியாதை செய்யப்பட்டிருந்ததை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதனை கண்டித்து பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் மற்றும் சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பபு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சு வார்த்தை நடத்தினர். அதனையொட்டி, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.

இது குறித்து வழக்குப் செய்தஅரும்பாவூர் போலீசார், அமைதியாக இருக்கும் பகுதியில் திட்டமிட்டு கலவரம் மூண்ட செய்து சமூக அமைதியை கெடுக்க வேண்டும், என்ற கெட்ட நோக்கத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

படத்தில் சாணி வீசப்பபட்ட பகுதியில் பாலை கொண்டு அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கழுவி சுத்தம் செய்தனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 17:25:00
Privacy-Data & cookie usage: