பெரம்பலூர் அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி திருட்டு!

schedule
2018-12-27 | 08:17h
update
2026-04-17 | 09:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Model Photo

Tipper lorry stolen at Petrol Bunk near in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் செந்தில்குமார். இவர் டிப்பர் லாரிகளை வைத்து, செங்கல், மணல், அரளை, ஜல்லி, வியாபாரம் செய்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், பெரம்பலூர் – அரியலூர் சாலையில் கவுள்பாளையம் பகுதியில், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சுப்பரமணியன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

இன்று காலை வந்து பார்த்த போது, லாரி காணமால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை காண போலீசார் சென்ற போது அங்கு சிசிடிவி கேமரா இணைப்பு வயர்கள் துண்டிக்கப்பட்டு கிடந்தது.

கடந்த சில நாட்களாகவே பெரம்பலூர் பகுதியில் வாகனங்கள் திருட்டில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 09:03:29
Privacy-Data & cookie usage: