பெரம்பலூர் அருகே டிப்பர் லாரி

பைக் மோதல்; வாலிபர் பலி! மற்றொருவர் படுகாயம்!!

schedule
2021-04-15 | 17:31h
update
2021-04-15 | 17:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tipper truck-bike collision near Perambalur; Youth kills! Another injured !!

பெரம்பலூர் மாவட்டம், எசனை காட்டுமாரியம்மன் கோவில் அருகே டிப்பர் லாரியும் டூவீலரும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். அரசலூரை சேர்ந்த அமைதிஹாசன் (வயது 21). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருடன் அதே ஊரை சேர்ந்த சுபாஷ்-ம் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இன்று வழக்கம் பெயிண்டர் பார்த்து விட்டு பெரம்பலூரில் இருந்து அரசலூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக் எசனை காட்டுமாரியம்மன் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது முன்னே கரும்பு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. பின்னே வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் இவர்கள் சென்று பைக் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அமைதிஹாசன் உடல் துடிதுடித்து பலியானர். சுபாஷை போலீசார் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த உறிவினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பபதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனா. விபத்தில் பலியான அமைதிஹாசனின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 10:21:18
Privacy-Data & cookie usage: