TNEB Consumer Grievance Day Meeting Announced at Perambalur

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.பிரகாசம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மார்ச். 10ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

எனவே, இக்கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று, தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என குறிப்பிட்டுள்ளார்.


Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!