TNEB Staff killed were electrocuted near in Perambalur!
இந்நிலையில் அதே ஊரில் சிவன் கோவில் தெருவில் ஒரு வீட்டிற்கு புதிதாக மின் இணைப்பு வழங்குவதற்காக இன்று இரவு மின்சாரம் தடை செய்யப்பட்ட நேரத்தில் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை இணைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்சாரம் வந்தால் செந்தில்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் செந்தில்குமார் இறந்த நிலையில் கம்பத்திலேயே உடல் தொங்கியது.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.