பெரமபலூரில் 1686 நபர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி-1 தேர்வை எழுதினர்.

schedule
2017-02-19 | 18:37h
update
2026-09-23 | 12:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

TNPSC group1: 1686 persons wirtten exam in peramabalur

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற தொகுதி-1 ற்கான தேர்வு 06 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு 2,ஆயிரத்து 720 நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் ஆயிரத்து 686 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

Advertisement

இத்தேர்வுக்கு 10 முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் 03 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு தேர்வு நேரத்தில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்வெழுதும் நபர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளும், தேர்வு நடைபெறும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

தேர்வு நடைபெற்ற பெரம்பலூர் அரசு மேல் நிலை பள்ளி, ராமகிருஷ்ணா மேல் நிலை பள்ளி, மற்றும் தந்தை ரோவர் மேல் நிலைப்பள்ளிகள் ஆகிய இடங்களில் தேர்வு மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெரம்பலூர் மாவட்டத்திற்கான பிரிவு அலுவலர் கார்த்திக் ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 12:36:59
Privacy-Data & cookie usage: