To get the most yield of rainfed corn Maize Instructions: Perambalur the Department of Agriculture announced

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பி.சந்திரன் விடுத்துள்ள அறிவிப்பு ;

maize_big_imgபெரம்பலூர் மானாவாரி மக்காசோளத்தில் நல்ல விளைச்சல் பெற விவசாயிகள் கீழ்வரும் உத்திகளை கடைப்பிடிக்ககுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கோடை உழவிற்கு பின் இரண்டாம் உழவில் ஏக்கருக்கு 5டன் தொழுஉரம் இட்டு உழ வேண்டும்;. நிலம் களர்நிலமாக இருப்பின் ஏக்கருக்கு 4மூட்டை(200கிலோ) ஜிப்சம் இட்டு உழ வேண்டும்.

கடைசி உழவில் அடியுரமாக மண் பரிசோதனையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் யூரியா, டிஏபி (அல்லது) காம்ப்ளக்ஸ் உரங்களை இட்டு உழ வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 1கிலோ பாஸ்போபாக்டீரியா இரண்டையும் 15 கூடை நன்கு மக்கிய தொழுஉரத்துடன் கலந்து போதிய அளவு ஈரப்பதத்துடன் நிழலில் 15-20 நாட்கள் வைத்திருந்து விதைத்த 15 அல்லது 20வது நாளில் வயலில் இட வேண்டும்.

மானாவாரி மக்காசோளத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியானது பாருக்கு பார் 45செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ. ஆகும். எனவே 45செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். 45செ.மீ அல்லது 0.45மீ இடைவெளியில் பார்களும், 30செ.மீ அல்லது 0.30.மீ இடைவெளியில் செடிகளும் இருக்கும்பட்சத்தில் ஒரு ஏக்கரில் இருக்க வேண்டிய பயிர்களின் எண்ணிக்கையானது 4000சமீ(0.45மீ x 0.30மீ) = 29,630. தோராயமாக 30 ஆயிரம் செடிகள் ஒரு ஏக்கரில் பராமரிக்கப்பட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட விதையளவானது 8 முதல் 10கிலோ (அல்லது) 30,000 விதைகள் இவ்வாறு 30,000 செடிகள் ஒரு ஏக்கரில் இருக்கும் பட்சத்தில், ஒரு செடியில் உள்ள ஒரு கதிரில் இருந்து குறைந்தபட்சமாக 100கிராம் மணிகள் கிடைத்தால் ஏக்கரில் 3 டன் மகசூல் பெறலாம். மேலும் ஒரு கதிரில் சராசாpயாக 160 கிராம் மணிகள் கிடைத்தால் ஏக்கரில் 4.8 டன் மகசூல் பெறலாம். எனவே, விவசாயிகள் ஒரு ஏக்கரில் 30 ஆயிரம் செடிகள் இருக்குமாறு பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

இதற்கு கயிறு பிடித்து வரிசை நடவு முறையில் நடுவதே சிறந்த வழியாகும். மேலும் விதைகளை நடும் போது 4 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். மண்பரிசோதனையின் அடிப்படையில் மேலுரம் இடும் போது ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரத்தினையும் தவறாது இட வேண்டும்.

எனவே, விவசாயிகள் மானாவாரி மக்காசோளத்தில் தொழு உரம், மண்பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், முக்கியமாக ஏக்கரில் 30,000 செடிகள், வரிசை நடவு போன்ற உத்திகளை கடைபிடித்து அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!