வறுமையிலும் உதவும் மனப்பான்மையுடன் வாழவேண்டும்; ஐஜேகே நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் எம்.பி., பெரம்பலூர் திருமண விழாவில் மணமக்களுக்கு வாழ்த்து!

schedule
2022-09-01 | 18:09h
update
2022-09-01 | 18:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

To live with the attitude of helping even in poverty; IJK founder T.R. Parivendar MP, Perambalur Congratulations to the bride and groom!

பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் கிராமத்தை சேர்ந்த, மறைந்த தியாகராஜன் உடையார், செல்லம்மாள் இவர்களின் மகன் வழிப் பேரனும், மறைந்த நாராயணசாமி உடையார், பெரியம்மாள் இவர்களின் மகன் வழிப் பேரனும், திரவியம் – வெகுமதி தம்பதியரின் மகனுமான திருநிறைச்செல்வன் தி. சிவக்குமாருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூர் – ஈச்சம்பட்டியை சேர்ந்த மறைந்த சன்னாசி உடையார் – பெட்டியம்மாள் மகன் வழிப் பேத்தியும், ஆறுமுகம் – செல்லம்மாள் இவர்களின் மகள் வழிப்பேத்தியும், தர்மராஜ் – சந்தரா தம்பதியரின் திருநிறைச்செல்வி செல்வஅகல்யாவிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, பெரம்பலூர் ஜே.கே மஹாலில் திருமணம், பெரம்பலூர் தொகுதியின் எம்.பியும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் எம்.பி தலைமையில் நடந்தது.

Advertisement

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூர் எம்.பியுமான டாக்டர். டி.ஆர். பாரிவேந்தர் இந்துமுறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து மணமக்கள் சிவக்குமார், செல்வஅகல்யா ஆகியோருக்கு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு ஆசிவழங்கினார்.

பின்னர், திருமண விழாவில் பேசிய பாரிவேந்தர், எனது உறவினரின் திருமணத்தில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. நான் ஒவ்வொரு நாளும் யோகா செய்யும்போது என்னை வளர்த்து ஆளாக்கிய பெரியோர்களை நினைத்துக் கொண்டே இருப்பேன். நன்றி மறவது என்றும் கூடாது. அந்த நன்றியே நம்மை பெரிய நிலைக்கு கொண்டு சேர்க்கும். பணம் நிலையானது அல்ல. நம்முடைய மக்கள் வளரவேண்டும் என்று உருவாக்கிய சங்கத்திற்கும், கட்சிக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
வறுமையிலும் செம்மையாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். பணம் வந்தபின்னர் உதவுவேன் என்று இருக்ககூடாது. வறுமையிலும் தனனால் இயன்ற அளவு உதவும் மனப்பான்மையை மணமக்களும், பொதுமக்களும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று பாரிவேந்தர் கூறினார்.

நிகழ்ச்சியில், பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில அமைப்பு செயலாளர் அன்புதுரை வரவேற்றார். இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆர்.சத்தியநாதன், ஐஜேகே அமைப்பு செயலாளர் எஸ்.எஸ். வெங்கடேசன், ஐஜேகே வழக்கறிஞர் வி.வெங்கடேசன், ஐஜேகே அமைப்பு செயலாளர் என்.காமராஜ், ஐஜேகே இளைஞரணி செயலாளர் ஏ.கே.டி வரதராஜன், ஐஜேகே மாநிர விளம்பரபிரிவு செயலாளர் எஸ்.முத்தமிழ்செல்வன், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் கதிர்கணேச மூப்பனார், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் இளைஞரணி செயலாளர் பி.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்ககினர். பார்க்கவகுல முன்னேற்ற சங்க பெரம்பலூர் ஒன்றிய பொருளாளர் சங்கர் நன்றிகூறினார்.

பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ரகுபதி, மாவட்ட செயலாளர் ரெங்காஸ், மாவட்ட பொருளாளர் பரமசிவம் உள்ளிட்ட இந்திய ஜனநாயக கட்சி பொருப்பாளர்கள், பார்க்கவகுல முன்னேற்ற சங்க பொருப்பாளர்கள் விழாவில் பங்கேற்றனர். திருமணவிழாவில் மாநில, மாவட்ட, ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமண விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும், அறுசுவை விருந்தும், மரக்கன்றுகள் பரிசாகவும், வழங்கப்பட்டன.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 19:53:07
Privacy-Data & cookie usage: