கர்ப்பிணி சிறுமிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதீமன்றம் உத்தரவு

schedule
2017-04-11 | 20:03h
update
2026-06-22 | 10:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

To provide interim relief to pregnant girl, order the mahila court to State government

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால், தற்சமயம் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளி மீது வழக்கு தொடரப்பட்டு, பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

Advertisement

மகிளா நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையானவர் சிறுவிவசாயி என்றும், மழையின்மையால், விவசாயம் செய்ய முடியாமல் வருமானமின்றி குடும்பம் சிரமப்படுவதாகவும், இந்நிலையில், கர்ப்பிணியான சிறுமிக்கு இடைகால நிவாரணம் தொகை வழங்கிட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் பாலியியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் விதிகள் 2012ல் 7(1) கீழ் ரூ. 75 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைகால நிவாரணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்திரவிட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 10:38:54
Privacy-Data & cookie usage: