5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து; பெரம்பலூர் கலெக்டர் தகவல்

schedule
2021-01-30 | 17:20h
update
2021-01-30 | 17:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tomorrow, polio drops for children under 5; Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என ஆக மொத்தம் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க உத்தேசிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள் என ஆக மொத்தம் 1,548 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இளம்பிள்ளைவாதம் நோயை ஒழிக்க, பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து எத்தனை முறை கொடுத்திருந்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தவறாது குழந்தைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருத்து போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 22:01:45
Privacy-Data & cookie usage: