நாளை TNPSC குரூப் 2 தேர்வு: பெரம்பலூர் மாவட்டத்தில் 5986 பேர் எழுத உள்ளனர் : ஆட்சியர் தகவல்!

schedule
2018-11-10 | 07:44h
update
2026-07-06 | 06:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tomorrow TNPSC Group 2 Selection: Perambalur District to write 5986 people: Collector Information!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-2 தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்; நடைபெறவுள்ள தொகுதி- 2 ல் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்விற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், தேர்வு பணிகளுக்கு பணியமர்த்தப்படும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாகவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில், தமிழ்நாடு அரசுப்பணியாளார் தேர்வாணைய அலுவலர்களின் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியரின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-2-ல் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்விற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள 04 மையங்களில் 5986 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இத்தேர்வுக்கு 21 முதன்மை கண்காணிப்பாளர், 04 நடமாடும் குழுக்கள் மற்றும் 02 பறக்கும்படை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தேர்வு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. தேர்வு நடைபெறும் நாளன்று போட்டித் தேர்வாளர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகளும், தேர்வு நடைபெறும் மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து. தேர்வு எழுதுவோர் எந்தவித இடையூறுமின்றி தேர்வெழுத சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதுணையாக பணியாற்றவேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.கோ.ராஜராஜன் மற்றும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் ந.விஸ்வநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 06:42:24
Privacy-Data & cookie usage: