பெரியப்பா வீட்டில், பணத்தை எடுத்து தின்பண்டம் வாங்கி தின்ற சிறுமி சித்ரவதை; சிகிச்சையில் பலி: போலீசார் விசாரணை!

schedule
2022-01-09 | 15:06h
update
2022-01-09 | 15:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Torture of a girl who took money and bought a snack at Periyappa’s house; Kills in treatment: Police investigation!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா- மணிமேகலை தம்பதியரின் 10 வயது மகள் (மகாலட்சுமி). பள்ளி இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரத வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்டு விளையாட்டு பிள்ளையாக இருந்துள்ளார். வீட்டில் பணம் இல்லாததால், கடந்த 6ஆம் தேதி பெரியப்பா முருகன் வீட்டில், இருந்த 70 ரூபாய் பணத்தை எடுத்து தின்பண்டம் வாங்கி சாப்பிட்டுள்ளது அந்த குழந்தை.

Advertisement

இதை அறிந்த சிறுமியின் தாயார் மணிமேகலையும், பெரியம்மா மல்லிகா இருவரும் சேர்ந்து சிறுமி மகாலட்சுமியை அடித்தும் , வாயில் மற்றும் தொடையில் சூடு வைத்தும், நெருப்பில் மிளகாய் போட்டு புகை வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் உள்ளூர் மெடிக்கலில் மருந்து வாங்கி கொடுத்தும் சரியாகததால், கிருஷ்ணாபுரத்தில் உள்ள வட்டார மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் குழந்தை மாகாலட்சுமி உயிரிழந்தார்.

இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் தாய் மணிமேகலை, பெரியம்மா மல்லிகா இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியப்பா வீட்டில் பணம் எடுத்து தின்பண்டம் வாங்கி தின்றதற்காக குழந்தைக்கு உரிய அறிவுரை கூறாமல் கொடுமைப்படுத்தியதால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 22:07:34
Privacy-Data & cookie usage: