Trade unions condemned demonstrations in Perambalur, condemning the labor resistance of the states

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, சிஐடியூ, எல்பிஎஃப், ஏஐடியூசி,ஹெச்எம்எஸ் தொழிற்சங்கள் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு அச்சங்களின் மாவட்ட செயலாளர்கள் ஆர்.அழகர்சாமி, ஆர்.ரெங்கசாமி, வீ.ஞானசேகரன், ஏ.சின்னசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த முறையையும், அவுட் சோர்சிங் முறையையும், தடை செய்ய வேண்டும், பிக்சட் எம்ப்ளாய் முறையை கைவிடவும், தமிழகததில் முத்தரப்பு குழுக்கள் அமைக்க வேண்டும்,

தொழிற்சங்க உரிமைகளை காக்க சங்கம் வைத்தால் வன்முறையை தூண்டும் நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், யமாஹா, எம்.எஸ்.ஐ தொழிற்சாலைகளில் தொழிலாளர் போராட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவும்,

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களின் பிடித் தொகையில் கையாடல் செய்வதை நிறுத்த வேண்டும்,

மின்வாரியத்தில், மின்சாரம் கொள்முதல் மற்றும் வினியோகத்தில் நடைபெற்ற ஊழல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை தடுக்க வேண்டியும், மத்திய உணவு கழகத்தின் ஏஜண்டாக மாநில நுகர்பொருள் வாணிப கழகம் மாறியுள்ளதை தடுக்க வேண்டும், நெல், கரும்பிற்கு உற்பத்திக்கான கட்டுப்படியான ஆதார விலை வழங்கவும்,

பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகளை மூடுவதை தடுத்து நிறுத்தி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், கூட்டுறவுத்துறை ஊழியர்களை கொத்தடிமையாக நடத்துவதை தடுத்து நிறுத்தவும், பெட்ரோல் டீசல், விலைகளை ஜி.எஸ்.டி வரையறைக்குள் கொண்டு வந்து அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,

மோட்டார் வாகன சட்டத்தை திருத்தி அமைப்பதுடன், காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், வட்டச் செயலாளர் அகஸ்டின், மற்றும் அச்சங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து முழக்கங்களை எழுப்பி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!