மத்திய அரசை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

schedule
2018-01-26 | 18:47h
update
2018-01-27 | 01:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Trader associations Council condemned the demonstration of the central Government

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில், சிறுவணிகம் மற்றும் சில்லரை வியாபாரத்தில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இதனால் சிறுவணிகம் பெருமளவில் பாதிக்கும் என்பதால் இந்த மசோதாவை தாக்கல் செய்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கும் மசோதாவை திரும்ப பெறவலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் காந்தி சிலை முன்பு நேற்று மாலை நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் மற்றும் மாவட்ட தலைவருமான சண்முகநாதன் தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர் ஓவியர் முகுந்தன், மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் பெரம்பலூர் நகர வணிகர்கள், பாடாலூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், வேப்பூர் ம்றறும் பெரம்பலூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிறுவணிகர்கள், சிறுவியாபாரிகள் திரளாக பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 19:51:50
Privacy-Data & cookie usage: