TNPSC Group-4 VAO ; பயிற்சி வகுப்புகள் தொடக்கம்: கலெக்டர் தகவல்!

schedule
2024-01-18 | 15:32h
update
2024-01-18 | 15:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Training Classes for TNPSC Group-4 Begin: Collector Info!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 VAO தேர்வுக்கான ஜூன் -2024 தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 19.01.2024 முதல் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

Advertisement

இப்பயிற்சி வகுப்பில் திறனறி பலகை மற்றும் ப்ரஜக்டர் வசதியுடன் கூடிய வகுப்பறைகள், வாரத்தின் அனைத்து வேலைநாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். போட்டித்தேர்வுகளுக்கு தேவையான அனைத்து சமச்சீர் & பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரி தேர்வுகள் நடத்தப்படும், பாடதிட்டத்தின்படி வகுப்புகள் எடுக்கப்படும் என்பன குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்கு மண்டல இந்திய விமான நிலையங்களில் Junior Assistant ( Fire Service) – SRD, Junior Assistant (Office), Senior Assistant (Electronics) மற்றும் Senior Assistant (Accounts) ஆகிய காலிப்பணியிடங்களுக்கு 27.12.2023 முதல் 26.01.2024 வரை இணையவழியாக (www.aai.aero) விண்ணப்பிக்கலாம்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 94990 55913 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேற்கூறிய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பித்து, அதிக அளவில் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 23:17:00
Privacy-Data & cookie usage: