நாமக்கல் அருகே உள்ள கொல்லிமலை மலைவாழ்மக்களுக்கு பன்றி வளர்ப்பு குறித்து பயிற்சி

schedule
2018-11-21 | 14:04h
update
2026-04-10 | 19:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Training on pig farming for the people of Kolli Hills in Namakkal

நாமக்கல் மாவட்ட கொல்லிமலையில் மலைவாழ் மக்களுக்கு லாபகரமான முறையில் பன்றி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது

புதுடெல்லியில் உள்ள உயிர் தொழில்நுட்பவியல் துறையின் நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கினைந்த பன்றி வளர்ப்புத்திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் என்ற திட்டம் 36.097 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Advertisement

இந்த ஒருங்கினைந்த பன்றி வளர்ப்புத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும்,வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டத்தின் புத்தாக்கப் பயிற்சி மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா கொல்லிமலையில் உள்ள பெரியகோவிலூர் கிராமத்தில் நடைபெற்றது.

இதில் நாமக்கல் கால்நடைமருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பயனாளிகளுக்கு பன்றிக்குட்டிகள் மற்றும் இடுபொருட்களை வழங்கி பேசினார்.

அப்போது, பயனாளிகளின் வருமானத்தை அதிகரிக்க இனப்பெருக்கத்திற்கு பன்றிகுட்டிகளை வளர்க்கவும், ஒருங்கினைந்த பண்ணைய முறையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்போடு பன்றிகுட்டிகள் வளர்ப்பினையும் இணைந்து செயல்படுத்தினால் அதிகலாபம் ஈட்டலாம் என அவர் கூறினார்.

இத்திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் ரமேஷ் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க பன்றிவளர்ப்பு தொழில் முக்கிய வழி வழிவகுக்கும் என கூறினார்.

நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல் மற்றும் கால்நடைமருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மதிப்பு கூட்டிய பன்றி இறைச்சி உற்பத்திப்போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 19:38:02
Privacy-Data & cookie usage: