ரயில்வே தேர்வு வாரிய பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி

schedule
2018-03-23 | 13:03h
update
2018-03-23 | 13:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Training through the Perambalur district employment office workplaces plea to the railway board exam

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை நாடும் இளைஞர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

Advertisement

மத்திய அரசின் இரயில்வே தேர்வு வாரியம் மூலமாக 03.02.2018 வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி இந்திய இரயில்வேத் துறையில் உள்ள Assistant Loco Pilot உள்ளிட்ட 26,502 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2018 ஆகும். இத்தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் 4.4.2018 முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளதால் விண்ணப்பிக்காதவர்கள் உடன் விண்ணப்பிக்குமாறும், விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நகல், 31.0 கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சுய விவரக்குறிப்பு, மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் விவரங்களுடன் 3.4.2018-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்பித்து இலவச பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 17:23:09
Privacy-Data & cookie usage: