பெரம்பலூர்

அரியலூர் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை; பெரம்பலூரில் நடக்கிறது.

schedule
2018-12-05 | 14:35h
update
2018-12-22 | 08:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Training Workshop for Perambalur – Ariyalur District Journalists; Coming Dec 7th in Perambalur

மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில் பெரம்பலூரில் வரும் 7ம்தேதி ஊரக ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.

மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் செயல்படும் சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில் ஊரக ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பெரம்பலூர், அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் ஓட்டலில் வரும் 7ம்தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

Advertisement

சென்னை மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மாரியப்பன் முன்னிலை வகிக்கிறார். பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தலைமை வகித்து குத்து விளக்கேற்றிவைத்து ஊரக ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை தொடங்கிவைத்து பேசுகிறார். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன் கலந்து கொள்கிறார்.

தஞ்சாவூர் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கழக உதவி பேராசிரியர் டிட்டோஆனந்த், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா ஆகியோர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசுகின்றனர். இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளர்கள், புகைப்பட ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags: Ariyalur, Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 10:34:54
Privacy-Data & cookie usage: