Transfer to new website for Food Safety License; Perambalur Collector V. Santha

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெறுவதற்கான நடைமுறை எளிமைபடுத்தப்பட்டு, புதிய இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதால், வணிகர்கள் அதை பயன்படுத்தி உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவு வணிகர்களும், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையால் வழங்கப்படும் உரிமத்தை பெற foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

இதற்கு முன்பு foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவுப் பொருள்களின் தயாரிப்பிற்கு உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளர்கள், foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், பழைய இணைய தளத்துக்கான அதே பயனாளர் அடையாளப் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழைந்து, தரம் நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பொருள்களை தேர்வு செய்து உரிமத்தை திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

இதற்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. ஆனால் நிறுவனத்தின் பெயர் மாற்ற, உணவு வணிகத்தின் வகை அல்லது உற்பத்தி திறன் ஆகியவற்றை திருத்தம் செய்ய ரூ.1000- கட்டணத்துடன் வித்தியாசப்படும் கட்டணம் ஏதுமிருந்தால் அதையும் சேர்த்து செலுத்த வேண்டும்.

மேலும், இது குறித்து தகவல் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் அலுவலக தொலைபேசி 04328-224033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!