பெரம்பலூரில் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்த திருநங்கை! போலீசார் விசாரணை

schedule
2020-07-19 | 12:50h
update
2020-07-19 | 12:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Transgender man mysteriously found dead in Perambalur Police investigation

பெரம்பலூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த திருநங்கை சடலத்தால் பரபரப்பு: போலீசார் விசாரணை

Advertisement

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 4 ரோடு பகுதியில், உள்ள பெரம்பலூர் மதிமுக மாவட்ட செயலாளர் துரைராஜ் என்பவரது வீட்டின் முன்பகுதியில், ஒதியம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி- செல்லம்மாள் தம்பதியரின் மூன்றாம் பாலினத்து வாரிசான அண்ணாதுரை என்கிற அன்னக்கொடி (38) என்ற திருநங்கை உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 22:43:17
Privacy-Data & cookie usage: