போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு :அனைத்து பேருந்துகளும் இயங்கின

schedule
2017-05-17 | 07:14h
update
2026-07-01 | 05:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து 2 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், நிலுவைத் தொகை 1000 கோடி ரூபாயை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மீதம் உள்ள தொகையை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூர் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து பேருந்துகளும், அந்தந்த வழித்தடங்களில் இன்று காலை முதல் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.07.2026 - 05:51:02
Privacy-Data & cookie usage: