பெரம்பலூர் அருகே லாரி

பைக் மோதல்: தனியார் நிறுவன ஊழியர் பலி! அண்ணன் மகன் திருமணத்திற்கு வந்த போது சோகம்!!

schedule
2022-09-12 | 08:24h
update
2022-09-12 | 08:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Truck-bike collision near Perambalur: Private company employee killed! Sadness when the brother’s son came to the wedding!!

பெரம்பலூர் அருகே பைக்கும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வெண்பாவூரை சேர்ந்தவர் ஜட்ஜ் (42), இவர் ஒசூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தல் வேலை செய்து வருகிறார். இன்று காலை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெங்கனூரில் நடந்த அண்ணன் மகன் திருமணத்திற்கு சென்று விட்டு, சொந்த ஊரான வெண்பாவூர் செல்ல பைக்கில் ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள கல்லாற்று பாலத்தை கடக்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக எதிரே அரியலூரில் இருந்து பெங்களூருக்கு சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த லாரி மீது பைக் மோதியது. இதில் ஜட்ஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் கதறி அழுதனர். கல்யாண களைகட்டிய வீடு சோகமாக மாறியது.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விபத்தில் உயிரிழந்த ஜட்ஜ்-ன் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 20:59:57
Privacy-Data & cookie usage: