பெரம்பலூர் அருகே லாரி

கார் மோதல் : ஒருவர் பலி! 3 பேர் காயம்!!

schedule
2023-03-22 | 16:12h
update
2023-03-22 | 16:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Truck-car collision near Perambalur: one person killed! 3 people injured!!

Advertisement

பெரம்பலூர் அருகே இன்று மாலை சுமார் 3.15 மணி அளவில், லாரியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். மற்ற 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தம்பை அருகே ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி மீது, மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில், மதுரை காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் மகன் ஷ்யாம்கண்ணன் (22) தனது காரில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேசன் டெக்னாலஜி படித்து வந்தார். காரில் உடன் பயணித்த மதுரை கேகே நகரை சேர்ந்த வாசு மகன் சஷ்வத் (24), மதுரை மூலக்கரையை சேர்ந்த ஆகாஷ் (23) மற்றும் அஜய் (22) ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.08.2026 - 15:59:19
Privacy-Data & cookie usage: