பெரம்பலூர் அருகே மண், மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் !

schedule
2023-09-14 | 17:57h
update
2023-09-14 | 18:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Trucks smuggling mud and sand seized near Perambalur!

அகரம் சீகூரில் மணல்!

பெரம்பலூர் மாவட்டம் , அகரம் சீகூரில் உள்ள வெள்ளாற்று பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மங்களமேடு போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அகரம்சீகூர் வெள்ளாற்றில் லாரியில் மணல் ஏற்றி கொண்டிருப்பது தெரிந்தது. மணல் ஏற்றிக் கொண்டு இருந்தவரை பிடித்து விசாரித்த போது ஒகளுர் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. வெங்கடேசனை கைது செய்த போலீசார், மணல் திருட்டுக்கு பயன் படுத்தப்பட்ட டிப்பர் லாரி யை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூரில் மண்!

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் இருந்து பெரம்பலூர் ரோஸ் நகருக்கு சட்ட விரோதமாக மண் (கிராவல்) கடத்தலில் ஈடுபட்ட எளம்பலூரைச் சேர்ந்த
PGT பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை பறிமுதல் பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 01:10:54
Privacy-Data & cookie usage: