நாமக்கல்லில் ரவுடி வெட்டிக் கொல்ல முயற்சி: 3 தனிப்படை அமைப்பு : குற்றவாளிகளை பிடிக்க தீவிரம்

schedule
2018-05-13 | 20:00h
update
2026-04-29 | 00:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Try to kill Rowdy in Namakkal: 3 Police Special Team formed Intensification of criminals

நாமக்கல் : நாமக்கல்லில் ரவுடி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாரிகங்காணி தெருவைச் சேர்ந்தவர் காசி (எ) காசிராஜன்(29). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல்லில் பழக் கடை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செங்கோடம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் (எ) சுப்பிரமணியம் கொலை வழக்கில் கைதாகி இருந்த காசிராஜன் தற்போது ஜாமினில் வெளியில் வந்தார்.

Advertisement

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நாமக்கல்-திருச்சி ரோடு எஸ்கே நகர் பகுதியில் மனைவி தேவியுடன், காசிராஜன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் காசிராஜனை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த காசிராஜன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் தொடர்பாக காசிராஜனின் மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காசிராஜனை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலைப் பிடிக்க மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு 3 தனிப்படை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நாமக்கல் டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் குலசேகரன், எஸ்ஐ மாதையன் ஆகியோர் தலைமையில் அமைக்கப் பட்டுள்ள தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பழக்கடை உரிமையாளர் சுப்புராஜ் கொலையில் தொடர்புடைய மற்றொரு நபருக்கும், காசிராஜனுக்கும் இடையே சில மாதங்களாக முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. எனவே அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காசிராஜனைக் கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 00:57:57
Privacy-Data & cookie usage: