பெரம்பலூர் அருகே பெண்ணை, கழுத்தை அறுத்து கொலை முயற்சி: கள்ளக்காதலன் வெறிச்செயல்!

schedule
2019-10-20 | 08:31h
update
2026-07-09 | 09:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Trying to kill off the neck of Woman: paramour spree! near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி பேரூராட்சியிலுள்ள கண்ணகி தெருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற பச்சையம்மாள் (வயது 42), இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அது ஊரைச் சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (வயது 45) என்பவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஓராண்டாக கருதத்து வேறுபாடு காரணமாக இருந்து விலகி வந்த நிலையில், இன்று காலை பச்சையம்மாள் வீட்டிற்குள் சென்ற செந்தில்குமார், கத்தியால், பச்சையம்மாளின் கழுத்தை அறுத்து இன்று கொலை செய்ய முயற்சி செய்தார். இதில் பச்சையம்மாள், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு, 15 தையல்கள் கழுத்தில் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதோடு, தப்பியோடிய செந்தில்குமாரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதலன் கள்ளக்காதலியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 09:39:35
Privacy-Data & cookie usage: