தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு தற்காலிக தடை விதிப்பதுடன் புறநகர் பகுதிகளில் அனுமதி வழங்க வேண்டும்!

schedule
2025-09-27 | 19:52h
update
2025-09-27 | 19:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

TVK leader Vijay’s campaign should be temporarily banned and permission should be granted in suburban areas!

தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர். விஜய் ஒரு கட்சித் தலைவர் என்பது மட்டுமில்லாமல் ஒருவர் சினிமா பிரபலம் என்பதால் அவரைப் பார்க்க குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைத்து கட்சியினரும் பாரபட்சமின்றி அவரைப் பார்க்க கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். இந்நிலையில் தலைவர் விஜய் பஸ்ஸில் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு ஊர்ந்து செல்கிறார். பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் அவதி, ஏற்படுகிறது. தலைவர் விஜய் தொண்டர்களை கட்டுப்படுத்த எந்தவித முன்னெடுப்பும் செய்வதாக தெரியவில்லை. தலைவரின் கட்டளைக்கு தொண்டர்கள் கீழ்படிவதாகவும் தெரியவில்லை. தவெக தலைவரின் கூட்டத்திற்கு அவருடைய தொண்டர்கள் மட்டுமல்லாது அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து காத்திருப்பது கரூரில் நடந்த துன்பத்திற்கு காரணமாக உள்ளது. இதனை தவிர்க்க தலைவர் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய ஊருக்கு வெளிப்புறப் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். தவெக கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் பொதுமக்கள் ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதுவரை விஜயின் பிரச்சாரத்திற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூரில் நள்ளிரவு வரை காத்திருந்த மக்கள் ஏமாந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2026 - 15:35:24
Privacy-Data & cookie usage: