புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற வியாபாரிகள் இருவர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

schedule
2018-12-15 | 13:47h
update
2026-04-19 | 20:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two arrested by (Ganja) Cannabis seller in Mettupalayam: Rs.3 lakh worth ganja confiscated

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த வியாபாரிகள் இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, ரூ. 3 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதுவை வடக்கு பகுதி எஸ்.பி. தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாருக்கு மேட்டுப்பாளையம் முத்தரையர் பாளையத்தில் கஞ்சாவிற்பதாக ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து வடக்குபகுதி குற்றப்பிரிவு போலீசார் ராஜீ, ராஜவேலு, மூவரசன், ஜெயகுமார் மற்றும் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

Advertisement

அப்போது முத்தரையர் பாளையம் கல்கி கோவில் அருகே ஜீவா தெரு புளியந்தோப்பில் 2 பேர் கஞ்சாவை பொட்டலம் போட்டிருந்தனர். போலீசார் வருவதை கண்ட உடன் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் கஞ்சாவையும் கைப்பற்றினர். பின்னர் இருவரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரித்தனர்.

பிடிபட்டவர்கள் முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூர் காந்தி தெருவை சேர்ந்த அய்யப்பன்(26) பெயிண்டர், திருவண்ணாமலை சமுத்திர காலனியை சேர்ந்த தர்மன்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் தர்மன் திருவண்ணாமலையில் கஞ்சா வியாபாரியாக இருந்ததும், அங்கு சென்று அய்யப்பன் அடிக்கடி கஞ்சா வாங்கிவந்து புதுவையில் விற்றது தெரியவந்தது.

சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து கஞ்சாவை கொண்டுவந்து பொட்டலம் போட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து ஒரு பண்டலும், 40 சிறிய பொட்டலமும், மொத்தம் 1.740 கிலோ கஞ்சாவும், 2 செல்போன்களும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Puducherry
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 20:39:25
Privacy-Data & cookie usage: