பெரம்பலூர் மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க வந்த இடத்தில் செல்போன் திருடிய இருவர் கைது!

schedule
2021-04-13 | 17:03h
update
2021-04-13 | 17:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two arrested for stealing cell phone at Perambalur hospital

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியை பார்க்க வந்த இடத்தில் செல்போன் திருடிய பெண் உள்பட இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு இந்திரா நகரை சேர்ந்த கருணாநிதி மகன் மணிகண்டன் (வயது 24) இவர் உறவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு உடன் உதவியாக இருந்து வந்தார். இதேபோன்று கடலூர் மாவட்டம் தொழுதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரவிராஜா (வயது 49) இவரும் உறவினர் சிகிச்சை பெற்று வந்ததால் உடன் தங்கி உதவி செய்து வந்தார் இந்நிலையில் இவர்களது ரூ ரூ 1200 காணாமல் போனது‌. அதிர்ச்சி அடைந்த இருவரும் செல்போன் பணத்தை எடுத்து சென்றவர்களை தேடினர் அப்போது இருவர் வைத்திருப்பது தெரிந்தும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர் பின்னர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை குன்றத்தூர் அருகே உள்ள பழைய நல்லூரை சேர்ந்த சுரேஷ் மகள் நந்தினி (வயது 20) என்பதும் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் முரளி (வயது 20) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் அந்த மருத்துவமனையில் தங்கியிருந்த நோயாளியை பார்க்க நலம் விசாரிக்க வந்துள்ளனர். பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.08.2026 - 06:11:08
Privacy-Data & cookie usage: