பெரம்பலூர் மாட்டத்தில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது

schedule
2017-11-17 | 01:15h
update
2026-07-04 | 07:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two arrested in the POCSO Act in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறார்களை பாலியியல் தொந்தரவு செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் -1

திருச்சி மாவட்டம், ரயில்வே நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் ஜேக்கப் (21), ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், நன்னை கிராமத்தில் உள்ள சித்தி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் சிறுமி ஜேக்கப் உடன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் காணமல் தேடிய சிறுமியின் தந்தை பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஜேக்கப்பை கைது செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

சம்பவம் -2.

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 22), கொத்தனார். மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தையற்பள்ளிக்கு சென்று வந்த பெண் வீட்டை வெளியே சென்ற பெண் காணமல் போனது குறித்து பெண்ணின் தந்தை அரும்பாவூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய அரும்பாவூர் போலீசார் சிவபாலன் பெண்ணை கடத்தியது தெரியவந்தது. அரும்பாவூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 07:02:50
Privacy-Data & cookie usage: