Two boys die in water stages near Perambalur

schedule
2017-04-22 | 17:40h
update
2026-06-25 | 10:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two boys die in water stages near Perambalur || பெரம்பலூர் அருகே நீர் நிலைகளில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமாராஜ் (வயது 8) மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காரை கிராமத்தில் உள்ள வெள்ளைமண் குட்டைக்கு குளிக்க சென்ற சிறுவன் அலறினான். அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூச்சு திணறி உயிரிழந்தார்.

Advertisement

இதே போன்று, திருச்சி மாவட்டம், எம்.ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன் (வயது 11). ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில உள்ள தனது பெரியம்மா பாப்பாத்தி வீட்டிற்கு பள்ளி கோடை விடுமுறைக்காக வந்திருந்தார். அருகில் உள்ள ரெங்கராஜ் என்பவரது கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். தவறி விழுந்த மோகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மோகனின் உடலை மீட்டனர். இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சிறுவர்களின் உடல்களும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 10:45:28
Privacy-Data & cookie usage: