பெரம்பலூர் அருகே இரு கார்கள் மோதி விபத்து : 2 குழந்தைகள் உள்பட 9 பேர் நசுங்கி பலி! 4 பேர் படுகாயம்

schedule
2018-05-11 | 03:53h
update
2018-05-11 | 10:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two cars clash near Perambalur: 9 people including 2 children killed! 4 people were injured

பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டவேரா கார்மீது வெர்னா கார் மோதி ஏற்பட்டவிபத்தில் ஒரே குடும்பத்தைசேர்ந்த இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement


காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன் (வயது 36) என்பவர் தனது மனைவி லெட்சுமி (32), மகள்கள் பவித்ரா(14), நிவேதா(8), மகன் வரதராஜன் (5), மற்றும் உறவினர்கள் முரளி (55), மேகலா(19), நாரயணன்(40), பூபதி (23), ஆகிய 9 பேரும் ஒரு ஷவர்லெட் டவேரா வாடகை காரில் காஞ்சிபுரத்திலிருந்து கொடைக்கானல் நோக்கி இன்று நள்ளிரவு12.30 மணியளவில் பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர் திசையில் திருச்சியிலிருந்து கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நோக்கி சென்ற ஹீண்டாய் வெர்னா கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பறந்து சென்று எதிரே சென்ற ஷவர்லெட் டவேரா காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஷவர் லெட் டவேரா காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே டவேரா காரை பின் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற எட்டியோஸ் காரும் டவேரா காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்ற பெரம்பலூரில் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நடத்தி வரும் முன்னாள் இராணுவ வீரரான சக்திசரவணன் (51) உட்பட 5 பேரும் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த திடீர் சாலை விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 16:49:35
Privacy-Data & cookie usage: