பெரம்பலூர் அருகே கார் மோதி விபத்து: இளம்பெண் உள்பட இருவர் பலி! தப்பி சென்ற ஓட்டுனர் கைது!!

schedule
2018-07-22 | 09:54h
update
2018-07-22 | 10:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two killed in car accident near Perambalur Driver arrested for attempting to escape

பெரம்பலூர் அருகே காரின் டயர் வெடித்து தறிகெட்டு ஓடியதில் சாலையை கடக்க நின்றிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், மேலப்பட்டினபாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 55), இன்று காலை கடலூரில் இருந்து கொடைக்கானலில் படித்து வரும் தனது மகனை பார்க்க காரில் சென்று கொண்டிருந்தார். கார், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள விஜயகோபலாபுரம் தனியர் பால்பண்ணைக்கும், டயர் தொழிற்சாலைக்கும் இடையில் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. இந்நிலையில் சாலை கடப்பதற்காக சென்டர் மீடியனில் நின்றுக் கொண்டிருந்த தனியார் பால் பண்ணை ஊழியர்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்கராம்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் மருதபாண்டி (வயது 25), மற்றும் பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகள் மீனா (வயது 22) ஆகியோர் ஆகிய இருவர் மீதும் படுவேகமாக கண்ணிமைக்கும் வேகத்தில் மோதியது.

இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த ஸ்ரீதர், எதிர்திசையில் கார் ஓட்டி தப்பி செல்ல முயன்றார்.

Advertisement

பொதுமக்கள் உதவியுடன் நாரணமங்கலம் பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்து, காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

இந்த விபத்தால் இறந்து போனவர்களின், உடல்களை மீட்ட போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 15 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 02:46:17
Privacy-Data & cookie usage: