பெரம்பலூர் அருகே நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி : 10 பேர் படுகாயம்

schedule
2018-01-13 | 12:15h
update
2026-07-04 | 18:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two killed in two road accidents near Perambalur: 10 injured

பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேக்கரி தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜன் மகன் ஆனந்த் (வயது 44). சிவகங்கை மாவட்டம், பருத்திகான்வாய் கிராமத்தை சேர்ந்த அய்யாவு மகன்
கருப்பையா (வயது 53). இவர்கள் இவரும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன் நகரில் தங்கி பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலையில் உள்ள தனியார் பேக்கரி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

Advertisement

இன்று அதிகாலை 5.45 மணியளவில் ஆனந்த், கருப்பையா இருவரும் பணிக்கு செல்வதற்காக அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு மறுபுறம் சாலையில் விழுந்த ஆனந்த் மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் சம்பவஇடத்திலேயே ஆனந்த், கருப்பையா இருவரும் உடல்நசங்கி பலியாயினார்கள்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஆனந்த், கருப்பையா ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் கார் டிரைவர் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த மாதவன் மகன் விஜயகுமாரை (வயது 36) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே சாலையோர பள்ளத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயத்த பயணிகள் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

அவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 18:18:12
Privacy-Data & cookie usage: