பெரம்பலூர் அமமுக பிரமுகர் வல்லத்தரசு கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

schedule
2020-06-05 | 16:04h
update
2020-06-05 | 16:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two more arrested in Perambalur AMMK Vallatharasu murder case

பெரம்பலூரில், கடந்த ஜுன்.3ம் தேதி மாலை, முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெரம்பலூர் அமமுக நகர மாணவரணி செயலாளர் சங்கு பாண்டி (எ) வல்லத்தரசுவை, ஒரு கும்பல் ஒன்று வெட்டி சாய்த்து விட்டு தலைமறைவானது.

Advertisement

போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், பெரம்பலூரை சேர்ந்த பிரகாஷ், விஜயராஜ், காக்கா கார்த்தி, கஞ்சா ராஜா, ஆகியோர் கரூர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை நீதிபதி குளித்தலை சிறையில், 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் 18வது வார்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகேசன் (வயது 32), ஆட்டோ டிரைவர், 13 வது வார்டு, அழகிரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ் (வயது 31) ஆகியோர் பெரம்பலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். …

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 01:15:03
Privacy-Data & cookie usage: