பெரம்பலூர் அருகே இரு மோட்டார் சைக்கிள் மோதல் : விபத்தில் முதியவர் பலி

schedule
2017-12-01 | 08:56h
update
2026-07-04 | 10:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

two motorcycle collision near perambalur: old man killed in crash

பெரம்பலூர் மாவட்டம், சு. ஆடுதுறை அருகே இரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலியானர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60) இவரும், பெண்ணாடத்தை அடுத்த, இறையூர் கிராமத்தைச் சேர்ந்த அரிபிரபு (வயது 33) என்பவரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் வாலிகண்டபுரத்தில் நடைபெறும் திருமணத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். இவர்கள் சு ஆடுதுறை அருகே சென்ற போது
சு.ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி (வயது 40) என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அரிபிரபு ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசியெறியப்பட்ட ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். மேலும் இவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 10:20:58
Privacy-Data & cookie usage: