பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் தங்க நகை 20 ஆயிரம் ரொக்கம் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!

schedule
2021-05-10 | 18:34h
update
2021-05-10 | 18:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two-pound gold jewelery stolen from house in Perambalur, Rs 20,000 cash stolen

பெரம்பலூரில் பூட்டியிருந்த வீட்டில் இரண்டு பவுன் நகை இருபதாயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை பெரம்பலூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி சேர்ந்த ரங்கராஜ் மகன் பிரபு வயது 41 இவர் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள சில்வர் நகரில் வசித்து வருகிறார். கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஈச்சம்பட்டி சென்று விட்டார் இதை அறிந்த மர்ம நபர்கள் பிரபுவின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த இரண்டு பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் இன்று காலை வந்து பார்த்த போது இந்த சம்பவம் தெரியவந்தது இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் பெரம்பலூர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர்ந்து நடக்கும் திருட்டு சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:29:12
Privacy-Data & cookie usage: