நாமக்கல் அருகே கார் மோதியதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

schedule
2018-12-24 | 17:51h
update
2018-12-24 | 17:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two-wheeler car collision near Namakkal

நாமக்கல் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்றவர் இறந்தார்.

Advertisement

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காந்தி நகரை சேர்ந்தவர் நத்தீஷ்குமார் (31), இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறையில் சேந்தமங்கலம் வந்த இவர், சம்பவத்தன்று மதியம், 3 மணியளவில் பரமத்தி அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு டூ வீலரில் சென்று விட்டு, மீண்டும் சேந்தமங்கலம் திரும்பி வந்தார். கரூர் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், காரைக்கால் பகுதியில் ரோட்டைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது பெங்களூரில் இருந்து, சபரிமலை நோக்கி சென்ற கார் ஒன்று நத்தீஷ்குமார் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில், நத்தீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு பிரியங்கா (26), என்ற மனைவி நவ்யா (3) என்ற பெண் குழந்தை உள்ளனர். பரமத்தி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 12:53:13
Privacy-Data & cookie usage: