பெரம்பலூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்! இருவர் பலி!!

schedule
2019-10-29 | 16:35h
update
2019-10-29 | 16:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two-wheeler collides near Perambalur Two killed

பெரம்பலூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த இரு இளைஞர்கள் பலியாகினர். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரம்பலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட செங்குணம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்த சிற்றம்பலம் மகன் அஜித்குமார் (வயது 24). இவர், பெரம்பலூர் அருகே உள்ள தனியார் டயர் கம்பனியில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் அன்புக்குமார்(21) பெரம்பலூரில் உள்ள பூக்கடையில் பணி புரிந்து வந்தார்.

Advertisement

இன்று காலை 8.50 மணியளவில் செங்குணம் பிரிவு ரோட்டில் இருந்து செங்குணம் கிராமத்துக்கு செல்லும் கிராம சாலையில் வெங்கடேசன் என்பவரது வயலுக்கு அருகே சிற்றம்பலம் மகன் அஜித்குமார் (வயது 24) இருசக்கர வாகனத்தில் பெரம்பலூரில் இருந்து செங்குணம் நோக்கி சென்று கொண்டிருத்தனர். அப்போது செங்குணத்தில் இருந்து பெரம்பலூரை நோக்கி, அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் மகன் அன்புகுமார் (வயது 25) இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அந்த வண்டியில் நாராயணன் மகன் அருள்குமார் (வயது 21) பின் இருக்கையில் அமர்ந்து வந்தார். இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அஜித்குமார், அன்பு குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அருள்குமாருக்கு வலது கை கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினருடன் விரைந்து சென்று பலியான அஜித்குமார், அன்புக்குமார் உடல்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.08.2026 - 21:55:16
Privacy-Data & cookie usage: