பெரம்பலூரில் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்! சிகிச்சையில் இருந்த வாலிபர் சாவு!!

schedule
2020-02-28 | 16:21h
update
2020-02-28 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two wheeler face to face collision in Perambalur Death of the young man who was in treatment !!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடியை சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் (வயது 24) சென்னையில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் துறைமங்கலத்தில் உள்ள தனது அக்காவை பார்ப்பதற்காக துறைமங்கலம் வந்தவர் பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் அவரது அக்கா கணவரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு 4 ரோடு வரை சென்று மீண்டும் அக்காவின் வீட்டிற்கு வரும் பொழுது தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனமும், மணிகண்டன் வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement


எதிரே வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் துறைமங்கலம் முத்து ஔவையார் தெருவை சேர்ந்த ராஜ் (வயது 17) என்றும், அந்த வண்டியில், பின்னால் அமர்ந்து இருந்த 4 ரோடு மின்நகர் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (வயது 17) என்றும் தெரிய வந்தது. காயமடைந்த மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜ் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்தவர் இன்று காலை 9 மணியளவில் இறந்துவிட்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 20:23:18
Privacy-Data & cookie usage: