பெரம்பலூர் அருகே டூ வீலர்

டேங்கர் லாரி மோதல்: 3 பேர் பலி!

schedule
2023-10-23 | 19:19h
update
2026-08-10 | 00:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Two wheeler-tanker truck collision near Perambalur: 3 dead!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டத்துர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சஞ்சீவி மகன் வினோத்(19), ராஜி மகன் ராம்(20), செல்வராஜ் மகன் ஆனந்த்(22), நண்பர்களான இவர்கள் மூவரும், பெரம்பலூர் துறையூர் சாலையில், அடைக்கம்பட்டி கிராமத்தில் T.களத்தூர் பிரிவு சாலை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திவிட்டு, டாஸ்மாக் கடையில் இருந்து வரும் மண் பாதை வழியாக பிரதான சாலைக்கு மூவரும் ஒரே டூவீலரில் வந்துள்ளனர்.

Advertisement

அப்போது, பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி சென்ற டேங்கர் கேஸ் லாரி மூவரும் வந்த டூவீலர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த திடீர் சாலை விபத்தில், வினோத்தும் ராமும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த திடீர் விபத்தால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் விபத்துக்கு காரணமான கேஸ் டேங்கர் லாரியை ஓட்டி வந்த அத்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராஜா(37), என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மது அருந்தி விட்டு இருசக்கர வாகனம் சட்ட விரோதமாக இயக்கியதும், திடீரென இரு சக்கர வாகனம் வருவதை அறியாமல் சற்று கவனக்குறைவாக டேங்கர் லாரி இயக்கப்பட்டதுமே விபத்துக்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது.

மதுபானம் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் லாரி மோதி உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும், அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்களை சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.08.2026 - 00:13:09
Privacy-Data & cookie usage: